Special Events

Visit of Very Rev. Fr. Provincial to our parish

On the 6th of October 2013, Very Rev.Fr.Provincial, Fr.S.Arulanandam C.Ss.R along with the assistant provincial Fr.Thomas Jeyaraj C.Ss.R visited our parish. He presided over the Eucharistic celebration and gave a rousing homily. We held an extraordinary meeting of the Anbiyam coordination and 78 persons were present. A report of the achievments in the parish for the past three years was submitted. Here is the report:

 

நமது பங்கு அறிக்கை

கடந்த மூன்று ஆண்டுகளாக நமது பங்கு கடந்த வந்த பாதையை பற்றிய ஒரு கண்ணோட்டம்.

அன்பிய உறவுகள்


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  அன்பியங்கள் இருந்தது. இப்போது அபியங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் புதிய அன்பியங்கள் உறவாக்கும் முயற்சியும் நடந்து கொண்டு இருக்கிறது.
எல்லா அன்பியங்களும் மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ கூட்டம் நடத்துகிறார்கள். இந்த கூட்டங்கள் ஏதாவது ஒரு அன்பிய உறுப்பினர் வீட்டை தேர்ந்தெடுத்து நடத்துகிறார்கள். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் சுழற்சி முறையின் ஒவ்வொருவர் வீட்டிலும் நடத்தப்படுகின்றது. இதன் மூலம் அனைத்து உறுப்பினர்களும் அனைத்து குடும்பத்தினர்களையும் பற்றி தெரிந்து கொள்ள முடிகின்றது. உறப்பினர்கள் வீட்டில் விசேஷம், திருமணம் போன்ற நிகழ்வுகளில் அன்பிய உறுப்பினர்கள் அனைவரும்  அவர் அவர் வீடி விசேஷம் போன்று ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். குறிப்பாக இறப்பு போன்ற நிகழ்சிகளின் போடு அன்பிய உறுப்பினர்கள் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்க விதமாக அமைகின்றது. சுகம் இல்லாமல் இருப்பவர்களுக்காக அனைவரும் இணைந்து செபிப்பது, சுக இல்லாதவர்களை அன்பிய உறுப்பினர்கள் இல்லம் தேடி சந்தித்து செபம் செய்யும் விதம் மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது.

அருட்பணியாளர்கள் , மக்கள் உறவுகள்


நமது திருச்சபையின் விருப்பபடி அன்பியங்களின் உறவுகளை வலுசேர்க்கும் விதமாக திருபளியில் அன்பிய பங்கேற்ப்பு பங்குத் திருவிழாவின் போது அன்பியங்களின் பங்கேற்பு மிக சிறப்பாக உள்ளது. மேலே உள்ள நிகழ்வுகள் மிக சிறப்பாக அமைய அன்பிய உறுப்பினர்கள் அருட் தந்தையருடன் இணைந்து திருப்பலி முன்னுற, வாசகங்களை மன்றாட்டுக்கள் என்று தயார் செய்யும் விதம் மிக நேர்த்தியான விஷயம்.
அந்த அந்த அன்பியங்களில் நடைபெறும் ஆண்டு விழாக்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், கூட்டங்கள், தவக்கால திருப்பலி என அனைத்திலும் அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகளும் கலந்து கொண்டு அந்த அந்த நிகழ்வுகளை மிக மகிழ்ச்சியுடன் மக்களுடன் இணைந்து கொண்டாடுவது, செவிப்பது என்று அருட்தந்தையர்கள் மக்கள் உறவுகள் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

புள்ளி விவரம்


அன்பியங்களின் விபரம், அன்பியக் குடும்பங்களின் விபரம், தனிநபர் விபரம், அனைத்தும்   பங்கிலுள்ள கணினியில் கணினிமயமாகப்பட்டுள்ளது.. பங்கிலுள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் அன்று பங்குத்தந்தையிடமிருந்து  தனிப்பட்ட முறையில் காலையில் வாழ்த்துக்களும்,பின் மாலத் திருப்பலில் அவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, அவர்களுக்காக திருப்பலில் சிறப்பாக  செபிக்கப்படுகிறது.

ஆன்மிகம்


மேலே கூறப்பட்ட உறவுகளை வலுப்படுத்தவும் மக்களின் மனத்தில் உள்ள கடவுளின் பக்தி முயற்சிகளை வெளிப்படுத்தவும் தேவையான ஆன்மீக முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கடந்த ஆண்டு முதல் விவிலிய வ்வரம்கள் மிக சிறப்பாக கொண்டாடப்ப்படுமின்ற்றது. விவிலிய வாரம்களில் மக்களுக்கு விவிலியத்தில் உள்ள சந்தேகங்களையும் விவிலியத்தை பற்றி  இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளும் விதத்தில் விவிலிய வகுப்புகள் நடைபெறுகின்றது. இந்த வகுப்பு முதலில் பங்கு தந்தை அவர்களார் நடத்தப்பட்டது.பின்னர் தற்போது விவிலியத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர்களால் நடதப்ப்படுமின்ற்றது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வகுப்புகள் வருடத்திற்கு இரண்டு முறை பெரியவர்களுக்கும், வருடத்திற்கு ஒரு முறை சிறியவர்களுக்கும் நடத்தப்படுகின்றது.
சகாய அஞ்சல்  மூலம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை விவிலிய வினாடி-வினா போட்டி பங்கு மக்களுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு சரியான விடை எளிதுபவர்களின் பெயரும் , பரிசு பெற்றவர்களின் விவரமும், விடைகளும் அடுத்த சகாய அஞ்சலில் வெளியிடப்படுகின்றது.
சனிக்கிழமை மாலை நடைபெறும் இடை விடா சகாய அன்னை நவனாட்களில் தனி கவனம் செலுத்தப்பட்டு, புனிதர்கலப் பற்றிய தொடர் மறையுரை நடைபெற்றது. தற்போது மாதா பிரார்த்தனையில் உள்ள தேவ ரகசியன்கலப் பற்றி ஒவ்வொரு வாரமும் ஒரு தேவ ரகசியத்தைப் பற்றிய தொடர் மறையுரை சிறப்பாக நடபெட்ட்று வருகின்றது.
வணக்க மாதமாகிய மே மாதத்தில் அன்பியங்கள் மூலமாக தினமும் மாலையின் செபமாலை, பிரார்த்தனை செபிக்கபட்டு பின் சிற்றுன்டிவழங்கப்படுகிறது.
இடை விடா சகாய அன்னை திருவிழாவின் நாட்கள் நவனாட்களில் மறையுரகளில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து  நாட்களும் ஒரே தந்தை அவர்கள் தொடர் மறையுரை சிந்தனைகள் வழங்கப்படுகின்றது.
தவக்காலங்களிலும்  தியானமும், தவக்கால திருப்பயணம், ஓரியூர்  திருப்பயணம் வருடாவருடம் நடத்தப்படுகின்றது. பொது ஞானஸ்தானம், பொது முதல் திருவிருந்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தற்போது எப்போது வேண்டுமானாலும், மன அமைதியுடன், மன நிறைவோடு செபிப்பதற்கு ஆலயத்தின் முன் பகுதியில் நற்கருணை சிராலயம் கட்டப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.இது மக்களின் தனி செப வாஞ்சைகளையும், உணர்வுகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்த சிற்றாலயம் சுமார் இலட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்றாலயம், பங்கு மக்களுடைய நன்கொடையாலும், பங்கு மக்களின் நலம் விரும்பி ஒருவருடைய நன்கொடையாலும் சாத்தியமாகி உள்ளது.

நிர்வாகம்


சமூக நல பணிகள் ஏழைகளுக்கு உதவி செய்தல், பங்கில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் விதமாக வின்சென்ட் தே பவுல் சபை மிக சிறப்பாக பங்கு தந்தையின் ஆலோசனையைப் பெற்று, பங்கு தந்தையுடன் இணைந்ந்து செயல்படுகின்றார்கள் இவர்கள் ஆலய முற்றங்களில் காணிக்கை எடுத்தும், தன்னார்வமாக உதவி செய்யும் உள்ளங்களிடம் இருந்தும் காணிக்கை பெற்று குடும்பங்களை தத்தெடுத்து அவர்களின் இல்ல விழா செலவுகள், கல்வி செலவும், சுகவீனமான சமயங்களில் உதவுதல், பள்ளி சீருடைகள், கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்குதல் என்று இவர்களின் பணியை சீரும் சிறப்புமாக செய்கின்றார்கள். மேலும் ஏழைக் குடும்பங்களுக்குதையல் இயந்திரங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.
நமது பங்கில் செயல்பாடு மூலமாக பங்கு தந்தையின் அறிவுரையின் பேரில், ஒரு ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி, உதவி இருக்கின்றார்கள் வின்சென்ட் தே பவுல் சபையினர். இவ்வாறு இவர்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
வின்சென்ட்-டி-பால் சபையினரும், இளைஞர் மன்றத்தினரும், பங்குப் பேரவையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
நமது பங்குத் தந்தையின் தனி முயற்சியாலும், பங்கு மக்களின் முயற்சியாலும், ஆதரவினாலும் பங்கில் கல்வி நிதி சேர்க்கப்பட்டு, இந்தளவு அது ஏறக்குறைய  சேர்ந்துள்ளது. இதன் மூலம் நமது பங்கு சிறுவர்கள் யார், யார் பங்கின் மறைக்கல்வி வகுப்பில் மறைக்கல்வி பயில்கின்றார்களோ அவர்களில் மாணவ, மாணவியருக்கு இறுதி தேர்வில் பாஸ் செய்பவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையின் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. அவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொடுத்திருக்கும் ஊக்கத் தொகையின் அளவு சுமார் இதன் மூலம் மறைகல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊக்கப்படுதப்படுகின்றார்கள்.இதைத் தவிர சில ஏழை, மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்படுகின்றது. 

பயிற்சிகள்

மதுரை உயர் மறைமாவட்டத்தின் பவள விழாவை முன்னிட்டு இரண்டு முறை, பொது  நிலையினருக்கு இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இளைங்கர்களுக்கு தலைமையத்துவம் பற்றி கருத்தரங்கு பயிற்சி நடைபெற்றுள்ளது.
நமது பங்கின் இளைஞர்கள், வேலை தேடியும், படிப்பிற்காக அயர்நாட்டிற்கு செல்ல விரும்புவர்களுக்கு உயர்கல்வி வலி காட்டுதல் என்ற பயிற்சி முகாம் ஒருமுறை நடைபெற்றுள்ளது.

See More



Prev Next
  • Happy Holiday season .

Prev Next
  • .Happy Feast